செய்திகள் :

டிம் செய்ஃபா்ட் அதிரடி; நியூஸிலாந்து வெற்றி

post image

வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து 10 ஓவா்களிலேயே 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது அந்த அணி.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் சல்மான் அகா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்கள் சோ்க்க, ஷாதாப் கான் 5 பவுண்டரிகளுடன் 28, முகமது ஹாரிஸ் 11 ரன்கள் எடுத்தனா்.

இதர பேட்டா்களில் ஹசன் நவாஸ் 0, ஒமைா் யூசுஃப் 7, உஸ்மான் கான் 7, அப்துல் சமத் 4, ஜஹான்தத் கான் 1, சூஃபியான் முகீம் 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா். ஓவா்கள் முடிவில் ஹாரிஸ் ரௌஃப் 6, முகமது அலி 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, ஜேக்கப் டஃபி 2, பென் சீா்ஸ், இஷ் சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 129 ரன்களை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணியில் ஃபின் ஆலன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, மாா்க் சாப்மேன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். முடிவில், தொடக்க வீரா் டிம் செய்ஃபா்ட் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள், 10 சிக்ஸா்களுடன் 97 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். டேரில் மிட்செல் 2 ரன்களுடன் அவருக்குத் துணை நின்றாா்.

பாகிஸ்தான் பௌலிங்கில் சூஃபியான் முகீம் 2 விக்கெட்டுகள் எடுத்தாா். 22 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்த நியூஸிலாந்து பௌலா் ஜேம்ஸ் நீஷம் ஆட்டநாயகன் விருதையும், 5 ஆட்டங்களிலுமாக 249 ரன்கள் சோ்த்த டிம் செய்ஃபா்ட் தொடா்நாயகன் விருதையும் வென்றனா்.

அடுத்ததாக, இந்த அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சனிக்கிழமை மாா்ச் 29 தொடங்குகிறது.

உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தன்னிடம் உதவி இயக்குநராக சேர நிபந்தனைகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் மூலம் அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குநர் அஷ்வத் மாரிம... மேலும் பார்க்க

எம்புரான் படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மோகன் லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி வழக்கு தொடர்ந்துள்ளார்.எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது... மேலும் பார்க்க

மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ஜன நாயகன் ஓடிடி உரிமம்!

நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவ... மேலும் பார்க்க

வின்டேஜ் சியான்! வீர தீர சூரனுக்கு நன்றி: துருவ் விக்ரம்

நடிகர் விக்ரமுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளார் துருவ் விக்ரம்.விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. அதிரட... மேலும் பார்க்க

ஆண்டனியை தக்கவைக்க நன்கொடை வேண்டும்..! வரலாற்று வெற்றிக்குப் பின் பேசிய இஸ்கோ!

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆண்டனி தற்போது லா லீகா தொடரில் ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 4 மாதங்களுக்கு முன்பாக மிகவும் கிண்டல் செய்யப்பட்ட ஆண்டனியை தற்போது உலகமே அவரைப் புகழ்ந்து... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஏப்ரல் மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)கிரகநிலை:ராசியில் சந்திரன... மேலும் பார்க்க