குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்!
டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை: கொலையாளி யார்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடையவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர்களுக்கு இந்தக் குற்றச் செயலில் தொடர்பில்லை என்று விடுவிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உடா மாகாண பல்கலையில் செப்.10ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, சார்லி கிர்க்கை அடையாளம் தெரியாத நபர் சுட்டுக் கொன்றார். இன்னும் அவர் அந்த பல்கலை வளாகத்திலேயே இருப்பாரா என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், சார்லி கிர்க்கை, கட்டடத்தின் மறைவானப் பகுதியிலிருந்து சுட்டிருக்கலாம் என்று கூறப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.