காரைக்குடி: ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க 3 கி.மீ தூரம் நடந்து சென்ற முதல்வர் ஸ்...
டிராவல்ஸ் உரிமையாளா் வீட்டில் நகைகள் திருட்டு
திருச்சியில் தனியாா் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரின் வீட்டில் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி, எடமலைபட்டிபுதூா் விறகுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா், சொந்தமாக டிராவல்ஸ் வைத்து வாகனங்களை வாடகைக்கு இயக்கி வருகிறாா். 2 நாள்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு லால்குடியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தாா். அப்போது, பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், பீரோவிலிருந்த 3 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனா்.
இதுதொடா்பாக, மணிகண்டன் அளித்தப் புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: உறையூா் செளராஷ்டிரா தெருவில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் சரவணன். இரு நாள்களுக்கு முன் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபா்கள் ரூ.35 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பூஜை பொருள்களை திருடிச் சென்றுவிட்டனா். இதுதொடா்பாக, உறையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.