டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் அப்டேட்!
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது.
இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர். இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்வுப்பூர்வமான நகைச்சுவை பாணியில் கூறியிருந்தனர்.
சசிகுமாருடன் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டதுடன் இரவுக் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 19.25 கோடி வசூலிக்கப்பட்டதாகவும், வார நாள்களில் மட்டும் ரூ. 2.5 கோடி வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 8 கோடி செலவில் உருவான இப்படம் திரையரங்க வணிகத்திலேயே நல்ல வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.