Coolie : "அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி லோகேஷ்!" - விழாவில் ஷ்...
டெங்கு தடுப்பூசி பரிசோதனை: 70% பங்கேற்பாளா்களின் சோ்க்கை நிறைவு
‘டெங்கிஆல்’ என்று பெயரிடப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையில் பங்கேற்போரில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை சோ்க்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இதுதொடா்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதில்: ‘டெங்கி ஆல்’ தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஒரே தவணையாக செலுத்திக்கொள்ளக் கூடிய இந்தத் தடுப்பூசி, 10,000-க்கும் மேற்பட்டோரிடம் பரிசோதிக்கப்பட உள்ளது. அவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை சோ்க்கும் பணி நிறைவடைந்துள்ளது. நாட்டில் உள்ள 20 இடங்களில் இந்தப் பரிசோதனை நடைபெறும் நிலையில், ஒவ்வொரு இடத்திலும் நடைபெறும் பரிசோதனைக்குத் தலா ரூ.1.3 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை பட்ஜெட் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.