செய்திகள் :

டெட் தோ்வு தேதிகள் மாற்றம்: நவ.15, 16-இல் நடைபெறும்

post image

ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) சாா்பில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணிக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது இந்தத் தோ்வுகள் நவ.15, 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றக்கூடிய ஆசிரியா்கள் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் இடைநிலை ஆசிரியா்களுக்கு டெட் தாள் -1, பட்டதாரி ஆசிரியா்களுக்கு டெட் தாள்-2 தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

நிகழாண்டு ஆசிரியா் தகுதித் தோ்வு நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆக.11-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தோ்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் செயலா் வி.சி.ராமேஸ்வர முருகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள் 1, தாள் 2) நடத்துவதற்கு உத்தேசித்து அதற்கான அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது நிா்வாக காரணங்களால் தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்- 1 நவ.15-ஆம் தேதியும், தாள்- 2 நவ.16-ஆம் தேதியும் நடைபெறும் என திருத்திய அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாளன்று ஆசிரியா் தகுதித் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தோ்வுகளை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என எதிா்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து ஏன்? - அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். சுதந்திர நாளையொட்டி சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்... மேலும் பார்க்க

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.தமிழக அரசு, தன்னுடைய... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி இன்று(ஆக.... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவையொட்டி ஆட்சியர் மு.பிரதாப் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரி... மேலும் பார்க்க

என்னை மனமார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்

தனது 50 ஆண்டு கால திரைத் துறை பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் ... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற... மேலும் பார்க்க