செய்திகள் :

டென்னிஸ் ராக்கெட் உடைப்பு: மெத்வதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

post image

யுஎஸ் ஓபனில் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்ததிற்காக டேனியல் மெத்வதேவுக்கு 42,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.37.25 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபனில் ரஷியாவின் பிரபல டென்னிஸ் வீரர் டேனியல் மெத்வதேவ் தனது முதல் சுற்றில் பெஞ்சமின் பொன்ஸியுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் மெத்வதேவ் 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற செட்களில் தோல்வியுற்றார்.

முதல் சுற்றிலேயே வெளியேறிய விரக்தியில் தனது டென்னிஸ் ராக்கெட்டை உடையும் வரை ஓங்கி ஓங்கி அடித்தார்.

இதற்காக தற்போது அவருக்கு ரூ.37.25 லட்சம் அபராத்ததை யு.எஸ். ஓபன் அறிவித்துள்ளது.

கடைசியாக விம்பிள்டனிலும் பொன்ஸியுடன் முதல் சுற்றில் மெத்வதேவ் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

Daniil Medvedev was fined a total of $42,500 by the U.S.Open more than a third of his $110,000 tournament prize money for his meltdown during a first-round loss after a photographer wandered onto the court during the match.

சிவாஜி படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்!

நடிகர் சத்யராஜ் சிவாஜி திரைப்படத்தில் நடிக்காதது குறித்து பேசியுள்ளார்.நடிகர் சத்யராஜ் இறுதியாக நடித்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது. இப்படத்தில் நடிகர... மேலும் பார்க்க

இளநீர் குடித்தால் உடல் எடை குறையுமா?

இளநீர் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது, அது உண்மைதானா?இளநீர் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை பானம். இது உடலுக்கு அதிக நீர்ச்சத்தை அளிக்கும். இனிப்புச் ... மேலும் பார்க்க

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கல பதக்கங்களை வென்றார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பத... மேலும் பார்க்க

வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!

மிராய் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்தி கட்டனேனி இயக்கத்தில் நடிகர்கள் தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மிராய். பெரிய பொருள்செலவில... மேலும் பார்க்க

சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்ற வெஸ்லி: ஜிசிடி இறுதிப் போட்டிக்குத் தேர்வான பிரக்ஞானந்தா!

அமெரிக்காவின் வெஸ்லி சிங்க்ஃபீல்டு கோப்பையின் இறுதிச் சுற்றில் கோப்பையை வென்றார். இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாமிடம் பிடித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்... மேலும் பார்க்க

ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான தி ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்த... மேலும் பார்க்க