டெஸ்ட் - மாதவன் அறிமுக விடியோ வெளியீடு!
டெஸ்ட் திரைப்படத்தின் நடிகர் மாதவன் கதாபாத்திர அறிமுக விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் மற்றும் நயன்தாரா பிரதான பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இதையும் படிக்க | டெஸ்ட் - சித்தார்த் அறிமுக விடியோ!
இந்த நிலையில், டெஸ்ட் படத்தில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாதவனின் அறிமுக விடியோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில், மாதவன் நடுத்தர வர்க்க தொழில் முனைவோரைப் போன்று காட்டப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் சித்தார்த், நயன்தாரா அறிமுக விடியோக்கள் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் வருகிற ஏப். 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.