செய்திகள் :

`டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான சாதனை டு ரூட்டின் யுனிக் சாதனை' - ENG vs IND போட்டி சாதனைகள்

post image

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹெடிங்லி மைதானத்தில் ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் இந்தியா 471 ரன்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து பவுலிங்கில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்திய போதிலும், ஒல்லி போப்பின் சதம் மற்றும் பென் டக்கெட், ஹாரி ப்ரூக்கின் அரைசதங்களால் இங்கிலாந்து 465 ரன்கள் குவித்தது.

ஆட்ட நாயகன் பென் டக்கெட்
ஆட்ட நாயகன் பென் டக்கெட்

அதையடுத்து, 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா, கே.எல். ராகுல் மற்றும் பண்ட்டின் சதங்களால் இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

அந்த இலக்கையும், கடைசி நாளில் மட்டும் பென் டக்கெட்டின் சதம் மற்றும் ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்டின் அரைசதங்களால் 352 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 62 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 149 ரன்களும் அடித்த பென் டக்கெட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த ஒரே டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவை...

1) 1948-க்கு பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் 350+ இலக்கை எட்டிப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்திருக்கிறது. இதற்கு முன் 1948-ல் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் ஆஸ்திரேலியா 404 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், தலைமைப் பயிற்சியாளர் மெக்கல்லம்

2) டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஒரே டெஸ்ட் போட்டியில் 5 சதங்களை இந்தியா அடித்திருக்கிறது. மொத்த ரெக்கார்டில் ஆறாவது முறையாக இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது.

3) 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் அடித்து தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்திருக்கிறது (பண்ட் 2 சதம், ஜெய்ஸ்வால், கில், ராகுல் தலா ஒரு சதம்).

ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா

4) கிரிக்கெட்டில் செனா (SENA) நாடுகள் என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா (S), இங்கிலாந்து (E), நியூசிலாந்து (N), ஆஸ்திரேலியா (A) ஆகிய நான்கு நாடுகளிலும் மொத்தமாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் பட்டியலில் வாசிம் அக்ரமை (146) பின்னுக்குத் தள்ளி பும்ரா (150) முதலிடம் பிடித்திருக்கிறார்.

5) டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபீல்டராக அதிக கேட்ச் பிடித்தவராக ஜோ ரூட் (154 போட்டிகளில் 210 கேட்சுகள்) சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் முதலிடத்தில் இருந்தார் (164 போட்டிகளில் 210 கேட்சுகள்).

ஜோ ரூட்
ஜோ ரூட்

6) டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருக்கிறார். இதற்கு முன், 2001-ல் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியில் முன்னாள் ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆண்டி ஃபிளவர் (142 & 199*) இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

7) இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் பண்ட்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

8) இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 6.28 எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியிருக்கும் பிரசித் கிருஷ்ணா, ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக எக்கனாமியில் ரன்களைக் கொடுத்த இந்திய பவுலர்கள் என்ற மோசமான சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வருண் ஆரோனை (2014-ல் 5.91 எக்கனாமி ) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

BCCI: இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் தான் அளவுகோலா? புறக்கணிக்கப்படும் உள்ளூர் வீரர்கள்! | In Depth

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த தசாப்தத்துக்கான பரீட்சார்த்த முயற்சியின் ஒரு அணியாகத்தான் இங்கிலாந்தில் களமிறங்கியிருக்கிறது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி.வழக்கமாக ஒரு தொடருக்கு முன்பு அதற்கா... மேலும் பார்க்க

TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி.! | Album

TNPL-2025: கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி.! மேலும் பார்க்க

Gill: 'நாங்க சின்ன பசங்க; இன்னும் கத்துக்கணும்' - கேப்டனாக முதல் தோல்வி குறித்து கில்

'இந்திய அணி தோல்வி!'இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் கில் சில ... மேலும் பார்க்க

ENGvsIND: 'இந்தியாவின் தோல்விக்குக் காரணமான அந்த 3 விஷயங்கள்' - என்னென்ன தெரியுமா?

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றிருக்கிறது. பெரிய டார்கெட்டை நிர்ணயித்த போத... மேலும் பார்க்க

TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி |Photo Album

நெல்லை-TNPL-2025:திருச்சி கிராண்ட் சோழாஸ்அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி த்ரில் வெற்றி! மேலும் பார்க்க