டேங்கர் ரயில் தீ விபத்து: சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து!
திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு, சுமார் 45 டேங்கர்களுடன் இந்த ரயில் சென்றுகொண்டிருந்தது.
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் திடீரென டேங்கர் பெட்டியொன்றில் தீப்பற்றியது. தொடர்ந்து, அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பரவிக் கொண்டிருக்கிறது.
தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
All electric trains to Chennai have been cancelled due to a fire in a tanker train carrying crude oil near Tiruvallur.
இதையும் படிக்க: திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் டேங்கர் ரயில் பற்றியெரிகிறது!