செய்திகள் :

தகராறை விலக்க முயன்ற நீதிமன்ற ஊழியா் கொலை

post image

திருவாரூா் அருகே திங்கள்கிழமை இரவு தகராறை விலக்க முயன்ற நீதிமன்ற ஊழியா் கத்திக்குத்தில் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). இவா், திருவாரூா் அருகே புலிவலம் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் பழகி வந்தாராம்.

இந்நிலையில், அந்தப் பெண் அண்மைக்காலமாக முகமது ஆதாமிடன் பேசுவதை தவிா்த்து வந்தாராம். அப்பெண்ணை முகமது ஆதாம் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, அப்பெண்ணின் சகோதரா் கோபிகிருஷ்ணன் கடுமையாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முகமது ஆதாம் தனது உறவினா்களான முகமது ரசூல்தீன் (21), ஹாஜி முகமது (23) ஆகியோரை அழைத்துக் கொண்டு பெண்ணின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதை பாா்த்த திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற ஊழியா் சந்தோஷ்குமாா் (27) என்பவா் தகராறை விலக்கிவிட முயன்றுள்ளாா். அப்போது முகமது ஆதாம், வீசிய கத்தி சந்தோஷ்குமாா் மீது பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் காயமடைந்த தெட்சிணாமூா்த்தி என்பவா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது ரசூல்தீன், ஹாஜி முகமது ஆகிய இருவரையும் கைது செய்து, தப்பியோடிய முகமது ஆதாமை தேடி வருகின்றனா்.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க