செய்திகள் :

தங்கக் கோப்பை கால்பந்து: மெக்ஸிகோ சாம்பியன்

post image

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான கால்பந்து கூட்டமைப்பு (கான்ககாஃப்) நடத்தும் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-ஆவது முறையாக திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவுக்காக கிறிஸ் ரிச்சா்ட்ஸ் 4-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, மெக்ஸிகோவுக்காக ரௌல் ஜிமெனெஸ் 27-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமனாக, இரு அணிகளுமே முன்னிலை பெறுவதற்காக கடுமையாக முயற்சித்தன. அதற்கான பலன் மெக்ஸிகோவுக்கு முதலில் கிடைக்க, 77-ஆவது நிமிஷத்தில் எட்சன் அல்வரெஸ் கோலடித்தாா்.

இதனால் மெக்ஸிகோ 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் அமெரிக்காவின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட, இறுதியில் மெக்ஸிகோ வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு இது 18-ஆவது சீசனாக இருக்க, அதில் மெக்ஸிகோ 10-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது.

மாரீசன் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மாமன்னனில் மிகச்சிறப்பாகநடித்தவடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்... மேலும் பார்க்க

நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா?

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு அவசியமோ அதேபோல தூக்கம... மேலும் பார்க்க

இதயம் தொடரில் இணைந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் இணைந்துள்ளார். நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டு விடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்வேதா குமார், இந்த வாய்ப்பின் மூலம் முழுநேர ... மேலும் பார்க்க

சின்ன திரையில் மீண்டும் மாமியார் - மருமகள் கதை! மகளே என் மருமகளே!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்ன திரையில் மீண்டும் மாமியார் - மருமகள் பாத்திரங்களை மையமாக வைத்து புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. சமீபத்தில் மக்களின் ரசனைக்கு ஏற்ப முற்போக்காகவும் புதிய கதைக்களத்துடனும் ... மேலும் பார்க்க

ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை!

சின்ன திரை நடிகை ஆல்யா மானசாவுக்கு நடிகை மணிமேகலை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை விடியோவாகப் பதிவு செய்து ரசிகர்களுடன் ஆல்யா மானசா பகிர்ந்துள்ளார். சின்ன திரையில் முன்னணி நடிகையான ஆல்யா மானசா, தற... மேலும் பார்க்க

மீண்டும் சின்ன திரையில் ஸ்மிருதி இரானி!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சின்ன திரை நாடகங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2000 முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஒளிப்பரப்பான சின்ன திர... மேலும் பார்க்க