செய்திகள் :

தங்கக் கோயிலுக்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

post image

பஞ்சாப் மாநிலத்திலுள்ள, சீக்கியர்களின் புனிதத் தலமான தங்கக் கோயிலுக்கு மூன்றாவது முறையாக, இன்று (ஜூலை 16) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமிர்தசரஸ் மாவட்டத்தில், சீக்கியர்களின் புனிதத் தலமான, ஹர்மந்தீர் சாஹிப் என்றழைக்கப்படும் தங்கக் கோயிலுக்கு, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கோயில் நிர்வாகத்துக்கு வந்த மின்னஞ்சலில், தங்கக் கோயிலின் பைப்புகளினுள் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக பாதுகாப்புப் படைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையின், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மாநில காவல் துறையினர் அங்கு விரைந்து தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கக் கோயிலுக்கு வருகைத் தரும் சூழலில், வெடிகுண்டு மிரட்டல்களினால் அன்றாட வழிபாடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

ஏற்கனவே, கடந்த 2 நாள்களாக கோயில் வளாகத்தினுள் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ள சூழலில், கூடுதல் படைகள் அங்கு பணியமர்த்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபர்களை அடையாளம் கண்டுபிடிக்க சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்கக் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், அது குறித்து காவல் துறையினர் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உத்தரகண்டில் உள்ளாட்சித் தேர்தல்! இந்தியா - நேபாளம் எல்லை மூடல்!

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு ஜாமினில் வெளிவராத பிரிவின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.துபையில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை கா்... மேலும் பார்க்க

மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!

ஒடிஸாவில் உதவிப் பேராசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.பாலாசோர் மாவ... மேலும் பார்க்க