கரூர்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் காவலர் கைது; நடந்தது என்ன?
தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
சென்னையில் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாள்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்ட நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.59,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 7,435-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜனவரி முதல் வாரத்தில் 57 ஆயிரம் ரூபாயில் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.104-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கு விற்பனையாகி வருகிறது.