`மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை; அதன் தொடர்ச்சியே `உங்களுடன் ஸ்டாலின்' திட்டம...
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
சென்னை: சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கு விற்பனையாகிறது.
செவ்வாய்க்கிழமை காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.73,160க்கு விற்பனையாகிறது. அதுபோல, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.9,145க்கு விற்பனையாகிறது.
வெள்ளியும் ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.125க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.650 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையானது. தொடா்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையும் தங்கம் விலை மீண்டும் உயா்ந்து காணப்பட்டது.
அதன்படி, கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.9,155-க்கும், சவரனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.73,240-க்கும் விற்பனையானது. இன்று விலை குறைந்துள்ளது.