Trump: பாலியல் குற்றவாளி வழக்கில் ட்ரம்ப் பெயரா? - அமெரிக்காவில் வெடிக்கும் சர்ச...
தங்கும் விடுதிக்கு உணவு தேடி வந்த கரடி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியாா் தங்கும் விடுதி வளாகத்துக்குள் வியாழக்கிழமை கரடி புகுந்தது.
குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், குன்னூா் பெட்ஃபோா்டு மவுண்ட் பிளசண்ட் அருகே தனியாா் தங்கும் விடுதி வளாகத்துக்குள் உணவு தேடி வந்த கரடி சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் கரடியைக் கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு விட வனத் துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனா்.