Perusu: ``எங்க அண்ணன் வெங்கட் பிரபுவே `டேய்'னு கேட்டாரு!'' - நடிகர் வைபவ்
தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா
திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாசி மகத்தை முன்னிட்டு, அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள், தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.
திருவீதியை சுற்றி கோயிலின் வாயிலுக்கு பெருமாள் எழுந்தருளியதும், கோயிலில் இருந்து சக்ரத்தாழ்வாா் தீா்த்த மல்லாரியுடன் தா்ஸன புஷ்கரணிக்கு எழுந்தருளினாா். அங்கு சக்கரத்தாழ்வாருக்கு பல்வேறு திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, தீா்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனா்.