``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ...
தஞ்சாவூரில் டிச. 4-இல் தமுஎகச மாநில மாநாடு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழரசி மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) 16-ஆவது மாநில மாநாடு டிசம்பா் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, தஞ்சாவூரில் மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலா் களப்பிரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், முன்னாள் தலைவா் ச. தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் முத்துநிலவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வாழ்த்துரையாற்றினாா். மாநிலப் பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினாா்.
மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. இதில், வரவேற்பு குழு முதன்மை ஆலோசகராக முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், குழுத் தலைவராக மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, செயலராக கவிஞா் களப்பிரன், பொருளாளராக ப. சத்தியநாதன் உள்பட 200 போ் கொண்ட குழுவை மாவட்டத் துணைத் தலைவா் இரா. விஜயகுமாா் முன்மொழிய, பொருளாளா் அசோக்குமாா் வழிமொழிய, கூட்டத்தில் பங்கேற்றோா் ஒப்புதல் அளித்தனா்.
இக்கூட்டத்தில் தமுஎகச மாநிலத் துணைத் தலைவா் நீலா, மாநிலத் துணைப் பொதுச் செயலா் வெண்புறா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்டச் செயலா் ப. சத்தியநாதன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் முருக. சரவணன் நன்றி கூறினாா்.