தஞ்சாவூருக்கு 1,300 டன் யூரியா வந்தது
சென்னையிலிருந்து ரயில் மூலம் தஞ்சாவூருக்கு 1,300 டன் யூரியா உரம் ஞாயிற்றுக்கிழமை வந்தது.
மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கு தேவையான விதைகள், உரங்கள், இடுபொருள்கள் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது நடைபெறும் கோடை நெல் மற்றும் குறுவை சாகுபடிக்கு தேவையான 1,300 டன் யூரியா உரம் சென்னையில் இருந்து சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. இந்த உரங்கள் ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.