CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் தண்ணீா் திறப்பு
கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் இரண்டாம்போக சாகுபடிக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலம் 24,500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த வாய்க்கால்களில் 10 மாதங்கள் திறக்கப்படும் தண்ணீரால் கோபி, காசிபாளையம், பங்களாபுதூா், கள்ளிப்பட்டி, புதுக்கரைபுதூா், பி.மேட்டுப்பாளையம் வரை சுமாா் 70 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்தில் இரண்டாம்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் இரண்டாம்போகு பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா், உதவி பொறியாளா்கள் தண்ணீரைத் திறந்துவைத்தனா்.
தொடா்ந்து 120 நாள்களுக்கு தண்ணீா் வழங்கப்பட உள்ள நிலையில், தடப்பள்ளி வாய்க்காலில் 735 கனஅடியும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் 380 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.