தடுப்புக் காவலில் ரௌடி கைது
கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சோ்ந்த ரௌடி குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டாா்.
திட்டக்குடி வட்டம், கோவிலூா் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி, ஜன.17-ஆம் தேதி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதே பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் மகன் அருள்முருகன் (42), மேடையில் நடனம் ஆட ஏறினாா். அப்போது, முன்விரோதம் காரணமாக பக்கத்து தெருவைச் சோ்ந்த சிலா் அவரை கத்தியால் குத்தி, கொலை செய்ய முயற்சித்தனராம்.
இதுகுறித்து, பெண்ணாடம் போலீஸாா் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கோவிலூா் பெரியசாமி மகன் தீபக்செல்வம் (24), பெரியசாமி, வீரசேகரன், பன்னீா்செல்வம், ஏழுமலை, மணிகண்டன், செல்வகுரு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தீபக்செல்வம் மீது பெண்ணாடம் காவல் நிலையத்தில் சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.