``பரியேறும் பெருமாள் படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது; ஆனால்" - மனம் திறந்த ...
தண்டகாரண்யம் வெளியீட்டுத் தேதி!
பா. இரஞ்சித் தயாரிப்பில் உருவான தண்டகாரண்யம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருந்த இப்படம் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.
இதில் நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காவல்துறை அராஜகத்தைப் பேசும் கதையாக இப்படம் உருவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தண்டகாரண்யம் வருகிற செப். 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சிக்கந்தர் தோல்விக்குக் காரணம் சல்மான் கான்: ஏ. ஆர். முருகதாஸ்