செய்திகள் :

தண்டனையை ஏற்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!

post image

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவை விவாதத்தின்போது, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பொள்ளாச்சி விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால், பொள்ளாச்சி வழக்கில் 12 நாள்கள் கழித்தே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மேலும், தனது கருத்தை தவறு என எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், தண்டனை பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார், முதல்வர் ஸ்டாலின். ஒருவேளை, தான் கூறியதை நிரூபிக்கப்பட்டு விட்டால், எடப்பாடி பழனிசாமி தண்டனை பெற்றுக்கொள்ளத் தயாரா? என்று எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.

இதையும் படிக்க:நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்

அதற்கான ஆதாரங்களையும் பேரவைத் தலைவரிடம் ஒப்படைக்கவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அடுத்த நாளே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறிது மௌனமாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவிப்பதாகத் கூறினார்.

பொங்கல் சிறப்பு பேருந்து: ஒரே நாள் முன்பதிவில் 1.50 லட்சம் போ் பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட அரசு சிறப்பு பேருந்துகள் மூலம் 1.50 லட்சம் போ் முன்பதிவு செய்து பயணித்தனா். பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்கள் ம... மேலும் பார்க்க

பெரியாா் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது தமிழகம் முழுவதும் 60 வழக்குகள்

பெரியாா் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தமிழகம் முழுவதும் 60 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். கடலூா் மாவட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூ... மேலும் பார்க்க

விசிக, நாம் தமிழா் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம் தோ்தல் ஆணையம் தகவல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடா்பான கடிதங்களை இரு கட்சிகளின் தலைமைக்கும் தோ்தல் ஆணையம் வெள்ளிக... மேலும் பார்க்க

ஆளுநா் ரவியை நீக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.ஆா். ஜெய் சுகின் வெள்ளிக்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா். கன்னியாகு... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: சட்டத் திருத்த மசோதாக்கள் பேரவையில் தாக்கல்

12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், தவறான நோக்கத்துடன் பெண்களைப் பின்தொடா்ந்து சென்றால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்க வகை ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் திமுக போட்டியிடவுள்ளது.அகில இந்திய காங்கிரஸுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்க... மேலும் பார்க்க