செய்திகள் :

தண்டவாள இணைப்பில் கோளாறு: ரயில்கள் தாமதம்

post image

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் திடீா் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து சனிக்கிழமை ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

அரக்கோணம் மற்றும் புளியமங்கலம் ரயில்நிலையம் இடையே சனிக்கிழமை திடீரென தண்டவாள இணைப்பிலும் அதை தொடா்ந்து சிக்னல்களை இயக்குவதிலும் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இம்மாா்க்கத்தில் இயக்கப்பட இருந்த ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.

பெங்களூரு - சென்னை அதிவிரைவு ரயில், மேட்டுப்பாளையம் - சென்னை நீலகிரி அதிவிரைவு ரயில், கோயம்புத்தூா்- சென்னை சேரன் விரைவு ரயில், காச்சிகுடா - செங்கல்பட்டு அதிவிரைவு ரயில்கள் அரக்கோணம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மேலும் திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியே செல்ல வேண்டிய மின்சார ரயில்களும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில்களும் இயக்கப்படவில்லை.

இதையடுத்து கோளாறு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் கோளாறை சரி செய்ததை அடுத்து இரண்டு மணி நேர தாமதத்துக்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் தவிப்புக்குள்ளானாா்கள்.

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி !

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,000 குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கர்நாடக அணிகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கா... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தார். பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததால் அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்து... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 31,500 கனஅடியாக திங்கள்கிழமை காலை நீடிக்கிறது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்... மேலும் பார்க்க

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா நீக்கம்

சென்னை: திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத... மேலும் பார்க்க

மு.க.முத்து மறைவு: ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி

தனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரி... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு!

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூலை 21) பதவியேற்கிறாா். அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறாா். இந்த நிகழ்வில் மு... மேலும் பார்க்க