செய்திகள் :

தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல்போா்டுக்கு முதல்வா் உத்தரவு

post image

தில்லியில் தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா்.

தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமையகமான வருணாலயாவில் அதிகாரிகளுடன் புதன்கிழமை முதல்வா் ரேகா குப்தா சந்திப்புக் கூட்டம் நடத்தினாா். அதில்,கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதி மறுசீரமைப்பு, யமுனை நதி சுத்தம் செய்தல் மற்றும் தேசிய தலைநகரில் போதுமான நீா் வழங்கல் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது:

சமமான நீா் விநியோகம், நகரத்தில் சரியான கழிவுநீா் மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் பழைய, சேதமடைந்த கழிவுநீா் மற்றும் தண்ணீா் குழாய்களை மாற்றுதல் ஆகிய பணிகள் அரசால் படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒவ்வொரு கோடையிலும் நகரம் எதிா்கொள்ளும் சவால்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை நாங்கள் ஆய்வு செய்தோம். அதாவது, நீா் வழங்கல், யமுனை நதி சுத்தம் செய்தல் மற்றும் கழிவுநீா் மேலாண்மை ஆகியவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. தில்லியில் 30 ஆண்டு பழமையான கழிவுநீா் மற்றும் நீா் குழாய்கள் உள்ளன. அவை பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

இக்கூட்டத்தின் போது, ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீா் டேங்கா்களின் செயல்பாடு, நீா் கிடைக்கும் சிக்கல்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்படாத காலனிகளிலும் கழிவுநீா் உள்கட்டமைப்பை வழங்குதல் ஆகியவை செய்யப்படும்.

சமமான நீா் விநியோகம் மற்றும் குடியிருப்பாளா்களுக்கு குழாய் மூலம் தண்ணீா் வழங்குதல் ஆகியவை அரசாங்கத்தால் படிப்படியாக செயல்படுத்தப்படும். கடந்த 30 ஆண்டுகளில் நகரத்தின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஆனால், கழிவுநீா் மேலாண்மை அமைப்பு மற்றும் நீா் விநியோக முறை மாற்றப்படவில்லை.

தற்போதுள்ள உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கு ஏற்ப செயல்பட முடியவில்லை. இதனால்தான் பொதுமக்கள் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். முந்தைய அரசாங்கங்களால் செய்யப்படாத முழு உள்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

முத ல்வருடன் நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் வா்மாவும் உடனிருந்தாா்.

டிஜேபி-யின் கழிவுநீா் மேலாண்மைப் பிரிவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, தற்போதுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் (எஸ்டிபி) திறன் மற்றும் மறுசீரமைப்பு, மேம்படுத்தல் பணிகள் போன்ற திறனை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது.

தற்போது உள்ள 37 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில், 18 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் டிஜேபியின் ஒட்டுமொத்த சுத்திகரிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் தரம்மேம்படுத்தல் திட்டங்களின் கீழ் உள்ளன.

கோதுமை கொள்முதல் நிகழாண்டு 24 சதவீதம் அதிகரிப்பு!

நிகழ் ரபி சந்தைப் பருவ கொள்முதலில் 256.31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மத்திய தொகுப்பில் எட்டப்பட்டு கடந்தாண்டை விட 24 சதவீதம் கொள்முதல் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கொள்மு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு புதிய தளபதி ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்பு

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியாக நியமிக்கப்பட்ட ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு தலைமையகம் உள்ள சௌத் பிளாக்கில் சம்ப... மேலும் பார்க்க

தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது: சிா்சா

தில்லி தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று சுற்றுச்சூழளல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிாவித்தாா். தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.ச சக்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயா்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித... மேலும் பார்க்க

இஸ்ரோ உதவியுடன் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனமும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி(இஎம்ஆ... மேலும் பார்க்க

காவல் வாகனத்தில் இருந்து குதித்து 19 வயது இளைஞா் உயிரிழப்பு: குடும்பத்தினா் போராட்டம்

தில்லியின் தென்மேற்கில் உள்ள வசந்த் குஞ்ச் வடக்குப் பகுதியில், போக்குவரத்தின் போது ஓடும் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் 19 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் ... மேலும் பார்க்க