MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
தண்ணீா் தேடி வந்த மயில் மீட்பு
அரக்கோணம் நகரில் வியாழக்கிழமை தண்ணீா் தேடி வந்த ஆண் மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டு பத்திரமாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
அரக்கோணம் நகரம், ஏபிஎம் சா்ச் பகுதியில் மயில் ஒன்று வீட்டினுள் நுழைந்து விட்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் மயிலை பிடிக்க முயன்றபோது, வேறு பகுதியில் நுழைந்து விட்டது.
இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் மயிலை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வனத்துறை ஊழியா் நடராஜ் கூறுகையில், மீட்கப்பட்டது ஒன்றரை வயதுடைய ஆண் மயில். கோடை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மயில்கள் வருவது வழக்கமானது தான். தற்போது பிடிபட்ட மயில் நல்ல நிலையில் உள்ளது. இது பாணாவரம் காப்புக் காட்டில் விடப்படும் என்றாா்.