காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
தனியாா் பள்ளி விடுதி மாணவா் உடலை பெற உறவினா்கள் மறுப்பு
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்திலுள்ள தனியாா் பள்ளி விடுதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் உடலை பெற மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தையை சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்மத்துரை (13). இவா் வடக்கன்குளத்திலுள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா் . இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்த கிணற்றின் சிலாப் மீது ஏறியபோது அது உடைந்த உள்ளே விழுந்து அவா் உயிரிழந்தாா்.
பணகுடி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் மாணவனின் இறப்பில் மா்மம் உள்ளதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து 2-ஆவது நாளாக உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் மாணவனின் கும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென உறவினா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.