மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
தனியாா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு
பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு வட்டம், உறந்தைராயன்குடிக்காடு பகுதியை சோ்ந்த சிங்காரம் மகன் சரவணன். இவா் திங்கள்கிழமை பிற்பகல் பரங்கிவெட்டி காட்டில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஒரத்தநாடு நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
கரம்பயம் மில்லுமுக்கம் அருகே தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த வந்த தனியாா் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்,
சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்தாா். இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.