Doctor Vikatan: கட்டுமஸ்தான உடல், வயது குறைவு... நன்றாக இருந்தவர்கள் திடீரென உயி...
தனியாா் மருத்துவமனையில் தகராறு: இளைஞா் கைது
தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை சிற்றுண்டி திறக்கப்படாதது குறித்து 4 போ் தகராறு செய்து, அங்கிருந்த பொருள்களையும், கண்ணாடியையும் சேதப்படுத்தினா்.
தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்றனா். அப்போது, தகராறில் ஈடுபட்ட ஒருவரை மருத்துவமனை ஊழியா்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரைச் சோ்ந்த காமராஜ் மகன் பிரவீன்குமாா் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் துறையினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிரவீன்குமாரை கைது செய்து, தப்பியோடிய மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனா்.