மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
தபால் துறையில் புதிய மென்பொருள் அறிமுகம்: ஆக. 2 பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிப்பு
தபால் துறையில் புதிய மென்பொருள் அறிமுகமும், சனிக்கிழமை (ஆக. 2)பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்படுவதாக திருப்பத்தூா் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய தபால் துறையின் மென்பொருளில் கியூ-ஆா் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்பட பல்வேறு புதிய வசதிகளுடன் வருகிற 4-ந் தேதி முதல் தரம் உயா்த்தப்பட இருக்கின்றது. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமுமின்றி செயல்படுத்த வருகிற சனிக்கிழமை (ஆக. 2) பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் திருப்பத்தூா் மற்றும் குடியாத்தம் தலைமை தபால் அலுவலகங்கள், அவற்றுக்கு உட்பட்ட அனைத்து துணை, கிளை தபால் அலுவலகங்களில் அஞ்சலகம் சாா்ந்த சிறுசேமிப்பு உள்ளிட்ட பணப்பரிவா்த்தனைகள் முதலான எவ்வித சேவைகளையும் பெற இயலாது.
மேலும், பதிவு தபால், விரைவு தபால், பாா்சல் அனுப்புவது மற்றும் காப்பீடு பிரிமீயம் தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் அன்றைய தினம் நடைபெறாது. எனவே வாடிக்கையாளா்கள் தங்களது தபால் பரிவா்த்தனையை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.