செய்திகள் :

'தமிழகக் கல்வி நிதியை நிறுத்தி வைப்பது நியாயமில்லை' - நிதியை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

post image

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக அரசு அதனை ஏற்க மறுக்கிறது.

இதனால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே நிதியை வழங்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

ஸ்டாலின் - தர்மேந்திர பிரதான்
ஸ்டாலின் - தர்மேந்திர பிரதான்

இந்நிலையில் தமிழ்நாட்டினுடைய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது நியாயம் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையினை சமர்பித்தது. அதில், "பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால், தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி வழங்காமல் உள்ளது மத்திய அரசு.

அதேபோல கேரளாவுக்கு ரூ.859 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 1,000 கோடி வழங்காமல் உள்ளது மத்திய அரசு. சமக்ரா சிக்‌ஷா அபிநயான் திட்டத்தின் கீழ் இதை வழங்க வேண்டும். வழங்காமல் இருப்பது நியாயமில்லாதது.

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் இலக்குகளை அடையும் விதமாகவே, பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு முன்பு சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டம் தொடங்கப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி. திக்விஜய சிங்
காங்கிரஸ் எம்.பி. திக்விஜய சிங்

ஆனால் இப்போது தேசிய கல்விக் கொள்கைக்காக இதனை புறக்கணிக்க முடியாது. நிதிகளை விடுவிப்பதில் தாமதப்படுத்துவதால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவர்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது.

ஆசிரியர்களின் திட்டங்கள், பள்ளி உட்கட்டமைப்பு பரமாரிப்பு போன்றவற்றில் இடையூறு ஏற்படாமல் தடுக்க உடனே நிதியை தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு நிதியை அனுப்ப வேண்டும்" என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

புதுச்சேரியில் தனியார் `பைக் டாக்சி’ சேவை - வரவேற்கும் மக்கள்; எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு அயல் நாடுகளில் இருந்தும், அயல் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரி அரசும் மாநில வருவாய்க்காக சுற்றுலாவுக்... மேலும் பார்க்க

`மாணவர்களுக்கு நாங்களும் தமிழ் கற்றுக்கொடுக்கிறோம்..!'- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று உறுதியாகக் கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்க முடியாது என்று மிரட்டிக்க... மேலும் பார்க்க

குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரங்கேறிவரும் புல்டோசர் கலாசாரம், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பரவிவருவது, பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது! யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.... மேலும் பார்க்க

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள... மேலும் பார்க்க

'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேற... மேலும் பார்க்க