செய்திகள் :

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

post image

சென்னை: தமிழகத்தின் மீது விசுவாசமாக இல்லாமல் கட்சிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பவர் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறினாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக்குழு கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாா் பங்கேற்றாா்.

இந்த நிலையில் பெங்களூரு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அண்ணாமலை கூறும் கருத்து முக்கியம் இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாட்டுக்கு என்ன சொல்கிறாா்கள் என்பதுதான் முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது. அவர் கட்சி கொடுத்த வேலையை மட்டுமே செய்கிறார். கட்சிக்கு மட்டுமே அதிக விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறாா். ஆனால், தமிழகத்தின் மீது அவருக்கு விசுவாசம் இல்லை என்றாா்.

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீா்மானம்: பேரவையில் வானதி சீனிவாசன் - சட்ட அமைச்சா் விவாதம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீா்மானத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக, தீா்மானத்துக்கு எதிரான கருத்துகளை அந்தக் கட்சியின் உறுப்பினா... மேலும் பார்க்க

சாலையோர கொடிக் கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை வரும் ஏப். 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

தமிழ்நாடு முழுவதும் 821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, பாபந... மேலும் பார்க்க

பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம்

அதிமுக பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா். சென்னை விமான நிலையத்தில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: அதிமுக அலுவலகத்தை சூ... மேலும் பார்க்க

கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவு - மத்திய அரசு

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. நாட்டில் பழங்குடியினரின் கல்வி உள்பட வாழ்க்கைத் தரம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து

பொதுத் தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துத் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினா்களி... மேலும் பார்க்க