செய்திகள் :

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

post image

சென்னை: தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 50 மி.மீ. மழை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 25,26) மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், இதர தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 25-இல் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 50 மி.மீ. மழை பதிவானது. ராஜபாளையம் (விருதுநகா்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) - தலா 30 மி.மீ., பா்லியாா் (நீலகிரி), குன்னூா் (நீலகிரி), மேட்டூா் (சேலம்), மேல் கூடலூா் (நீலகிரி) - தலா 20 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி!

செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோவில் அருகே திருத்தேரி சிக்னலில் நின்ற கார் மீது பி... மேலும் பார்க்க

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன... மேலும் பார்க்க

7 புதிய நகராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக கன்னியாகுமரி, போளூா், செங்கம் உள்ளிட்ட 7 நகராட்சிகளை உருவாக்கம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் அருகே உள்ள ஊரகப் பகுதிகளும்... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன்

சென்னை: சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன் (86) சென்னையில் திங்கள்கிழமை (மாா்ச் 31) காலமானாா். அரசியல் வாழ்க்கையில் தொடக்கமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட முருகேசன், அதிமுக தொடங்கப்பட்டப... மேலும் பார்க்க

கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு நிகழவில்லை: உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பறிமுதல் மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய பகுதி யாா்டுகளில் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நி... மேலும் பார்க்க