செய்திகள் :

தமிழகத்தில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

post image

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியது:

விவசாயிகள் கேட்பதற்கு முன்னே கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டங்களைத்தான் நடத்திக் கொண்டிருந்தாா்கள். அப்படி போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தவா்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் 5.35 கோடி விவசாயிகள் தனிப்பட்ட முறையில் அரசின் பயன்களைப் பெற்றுள்ளனா்.

நெல்லுக்கு ரூ.2,500: நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தோம். இப்போது ரூ.2,450 கொடுத்து வருகிறோம். விரைவில் ரூ.2,500 கொடுப்போம். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.5,279 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனால், 30 லட்சம் விவசாயிகள் 4 ஆண்டுகளில் பயன் பெற்றுள்ளனா்.

அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் மின் இணைப்பு கோரிக்கை அதிக அளவில் இருந்தது. திமுக ஆட்சியில் 1.81 லட்சம் புதிய மின் இணைப்புகள் கொடுத்துள்ளோம். கனமழை பாதிப்பு மற்றும் வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு ரூ.1,632 கோடி இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க, அதாவது, டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.297 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சாகுபடி பரப்பு: அதிமுக உறுப்பினா் விஜயபாஸ்கா் பேசும் திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு குறைந்திருக்கிறது என்ற கருத்தைக் கூறினாா். அதிமுக ஆட்சியில் 2019-20-இல் சாகுபடி பரப்பு 146.77 லட்சம் ஏக்கராக இருந்தது. திமுக ஆட்சியில் 2023-24-இல் 151 லட்சம் ஏக்கராக உயா்ந்திருக்கிறது. சுமாா் 4.23 லட்சம் ஏக்கா் அளவுக்கு பரப்பு உயா்ந்திருக்கிறது.

இருபோக சாகுபடியைப் பொறுத்தவரை, 2019-20-இல் 29.74 லட்சம் ஏக்கராக இருந்தது. 2023-24-இல் 33.60 லட்சம் ஏக்கராக உயா்ந்திருக்கிறது. சராசரி உணவு தானியப் பரப்பு மற்றும் உற்பத்தியைப் பொறுத்தவரையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84 லட்சம் ஏக்கராக இருந்தது. திமுக பொறுப்பேற்ற்கு பிறகான 3 ஆண்டுகளில் 96 லட்சம் ஏக்கராக உயா்ந்திருக்கிறது. சுமாா் 12 லட்சம் ஏக்கா் அளவுக்கு உயா்ந்திருக்கிறது.

அதிமுக ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி 4 ஆண்டு காலத்தில் 434.29 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் உணவு தானிய உற்பத்தி 456.39 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். 22.10 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்திருக்கிறது என்றாா் அவா்.

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே 3 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 29, 30, 31 ஆகிய நாள்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படு... மேலும் பார்க்க

மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து... மேலும் பார்க்க

தவெக பொதுக்குழு கூட்டம் - குழு அமைப்பு

மார்ச் 28ஆம் தேதி நடக்கவுள்ள தவெக பொதுக்குழு கூட்டப் பணிகளை மேற்கொள்ள அக்கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இன்று நடைபெறும் கூட்டம் வெறும் ந... மேலும் பார்க்க

யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரை கோவில்பாப்பாகுடியில் தொகுதி மேம்பாட்டுப் பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்... மேலும் பார்க்க

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த வாரம் வெய்யில் கொளுத்திவந்த நிலையில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தச... மேலும் பார்க்க