செய்திகள் :

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?

post image

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் கடந்த 2020 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தடை செய்யப்பட்டுள்ளன. அதன்பிறகும் இந்த வாகனங்கள் தடையின்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி சென்னையைச் சோ்ந்த தேவதாஸ்காந்தி வில்சன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அதில், தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை ஆணையா் விவரம் அளித்துள்ளாா். இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கும் தொடா்பு உள்ளது. எனவே, இந்த முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் கடந்த 2020 ஏப்ரலுக்குப் பிறகு பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அதிமுக - பாஜக கூட்டணியா? அமித் ஷா சூசகம்!

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பாஜக - அதிமுக கூட்டணியை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``202... மேலும் பார்க்க

மனோஜ் மறைவு: அரசியல், திரைப் பிரபலங்கள் இரங்கல்!

இயக்குநர் மனோஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைகிறதா அதிமுக? - அண்ணாமலை கூறுவதென்ன?

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையுமா இல்லையா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி த... மேலும் பார்க்க

அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

தில்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்... மேலும் பார்க்க

மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இரு மொழிகளே போதும் என்பவர்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள்தான் நாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க