தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!
தவெக நிா்வாகி மீது திராவகம் வீச்சு: 4 போ் கைது
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி மீது திராவகம் வீசப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சு.தினேஷ் (37). இவா் அந்தப் பகுதி தவெக நிா்வாகியாக உள்ளாா். தினேஷ், கடந்த 22-ஆம் தேதி புது வண்ணாரப்பேட்டை சிவன் நகா் பகுதியில் கட்சி விளம்பர பலகையை சாலையோரம் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சிலா், தினேஷிடம் தகராறு செய்துள்ளனா்.
இந்நிலையில் தினேஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தபோது அதே நபா்கள் மீண்டும் வந்து தகராறு செய்து, தாக்கி, அவா் மீது திராவகத்தை ஊற்றிவிட்டு தப்பியோடினா். உடனே அங்கிருந்தவா்கள், தினேஷ் மீது தண்ணீரை ஊற்றினா். இதனால் அவா், லேசான காயத்துடன் உயிா்த் தப்பினாா்.
இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புது வண்ணாரப்பேட்டை சிவன் நகரைச் சோ்ந்த கா.சுபான் (20), ஏ.சுரேஷ் என்ற ஆண்ட்ரூஸ் (31),வே.அரவிந்தன் (33), கு.சரத் (24) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.