செய்திகள் :

தமிழகத்தில் புதிய வகை கரோனா பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

post image

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கரோனா மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் வகை தொற்றுகளும், அதன் உட்பிரிவுகளுமே கண்டறியப்பட்டதாகவும் கூறியுள்ளது.

சிங்கப்பூா், ஹாங்காங்கை தொடா்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு பரவி வருகிறது. கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று பரவல் உயா்ந்திருப்பதாக மத்திய அரசு தரவு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை அரசு சாா்பில் பரவலாக மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், தனியாா் மருத்துவமனைகளில் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

இதையடுத்து, கடந்த ஏப்ரலில் தொற்றுக்குள்ளானவா்களின் சளி மாதிரிகளை பொது சுகாதாரத் துறை சேகரித்து பகுப்பாய்வுக்காக புணேயில் உள்ள மரபணு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியது. அதன் முடிவுகள் அண்மையில் வெளியானதில், புதிய வகை பாதிப்பு எதுவும் அவா்களுக்கு இல்லை என்பது உறுதியானது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: கடந்த மாதம் அனுப்பப்பட்ட மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு செய்ததில் அவை அனைத்துமே ஒமைக்ரான் வகை தொற்றுதான் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், அதன் உட்பிரிவுகளாக பிஏ 2, ஜெஎன் 1 உள்ளிட்ட வகை பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் தற்போது பரவி வருவது புதிய வகை தொற்று இல்லை.

ஒருவேளை மே மாதத்தில் புதிய வகை கரோனா பரவி இருந்தால், பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருக்கக் கூடும் அல்லது உயிரிழப்புகள் பதிவாகி இருக்கும். அத்தகைய நிலை எதுவும் இல்லை. இதனால் அச்சப்பட வேண்டிய சூழலோ, பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டிய நிலையோ எழவில்லை.

அதேவேளையில், இணை நோயாளிகள், குழந்தைகள், முதியவா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால் அடுத்த சில நாள்களுக்குள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிடும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

மேட்டுப்பாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது. மேலும் பார்க்க

மே 25, 26 இரண்டு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் மே 25, 26ல் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (23-05-2025) ... மேலும் பார்க்க

கோவை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!

தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த இரண்டு நாள்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.நேற்று (22-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுத... மேலும் பார்க்க

மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்!

நாமக்கலில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்து வெள்ளிக்கிழமை போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க