தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!
பராமரிப்புப் பணி: மே 24, 26 தேதிகளில் 21 மின்சார ரயில்கள் ரத்து!
தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக கும்மிடிப்பூண்டி, சூளூர்பேடை செல்லும் 21 புறநகர் மின்சார ரயில்கள் மே 24, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.
எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் மே 24, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.20 முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளன.
இப்பணிகள் நடைபெறும் நாள்களில் அதிகாலை 5 முதல் மாலை 4.30 மணி வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் 21 புறநகர் மின்சார ரயில்கள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
இருப்பினும் பயணிகளின் வசதிக்காக மே 24, 26 ஆகிய தேதிகளில் காலை 10.30 முதல் மாலை 4.45 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் பக்கம் காங்கிரஸ்: ராகுல் மீது பாஜக விமர்சனம்!