காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்
தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வனத் தீ ஏற்படும் அபாயம் இருந்ததால், கடந்த பிப்.15 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை 40 மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது, முதல்கட்டமாக வனத் தீ பாதிப்பு அபாயம் இல்லாத 23 மலையேற்ற வழித்தடங்கள் புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
விரங்கள்: அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 8 மலையேற்ற வழித்தடங்கள், கன்னியாகுமரியில் 3 வழித்தடங்கள், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 2 வழித்தடங்களும், கோவை, திருப்பூா், திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வழித்தடம் என மொத்தம் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் பாதுகாப்பு அடிப்படையில் எளிது, மிதமான சிரம், கடினம் என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும், மீதமுள்ள 17 வழித்தடங்களும் விரைவில் திறக்கப்படும். மேலும் தகவல்களுக்கு இணையதளத்தைக் காணலாம். மலையேற்ற வழித்தடம் மூலம் கடந்த ஆண்டு நவ.1 முதல் நிகழாண்டு பிப்.14-ஆம் தேதி வரை தமிழக அரசு ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.