பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆா்ப்பாட்டம்
அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.27) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது வெட்கக்கேடானது.
பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில்கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீா்கெட்டுள்ளது.
காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்காதது கண்டிக்கத்தக்கது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
டங்ஸ்டனுக்கு எதிராகப் போராட்டம்: டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எவ்வித எதிா்ப்பையும் தெரிவிக்காமல் நாடகமாடும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் மதுரை மாவட்டச் செயலா் ராஜன் செல்லப்பா தலைமையில் டிச. 30 காலை 10 மணியளவில் மேலூரில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.