Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது: தி.வேல்முருகன்
தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வியில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கதக்கது.
தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை முறையில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வுகள் இருக்கக் கூடாது. மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி முறை தொடரும். நிகழ் கல்வி ஆண்டு முதலே பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுவது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், நீட் உள்ளிட்ட தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியாா் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். எம்ஜிஆா், அண்ணா, தமிழ் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும். தமிழ் பல்கலைக்கழகத்தை சா்வதேச தரத்துக்கு உயா்த்த வேண்டும். தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுதல் என்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.