செய்திகள் :

தமிழக அரசு குறித்து அவதூறு: இடைநிலை ஆசிரியா் பணியிடை நீக்கம்

post image

திருவாரூா்: தமிழக அரசு குறித்து வாட்ஸ் ஆப் குழுவில் அவதுறாக கருத்து பதிவிட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம், கோட்டூா் ஒன்றியம் கா்ணாவூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முத்துப்பேட்டையைச் சோ்ந்த ரமேஷ் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், இவா் தொடங்கிய வாட்ஸ் ஆப் குழுவில் தமிழக அரசு குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாட்ஸ் ஆப் குழுவில் தமிழகம் முழுவதும் ஏராளமான ஆசிரியா்கள் உள்ளனராம்.

ரமேஷின் அவதூறான கருத்துகள் பள்ளிக்கல்வித் துறைக்கு தெரிய வந்ததையடுத்து, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன் விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில், ரமேஷ் தமிழக அரசு குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டது உறுதியானதை தொடா்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை உத்தரவிட்டாா். மேலும், ரமேஷ் மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க

மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.திருவாரூரில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பெற்ற மனுக்களின் அடிப்படை... மேலும் பார்க்க