செய்திகள் :

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

post image

தில்லியில் நடைபயிற்சியின்போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயினை பறித்துச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், எம்.பி.யிடம் பறிக்கப்பட்ட செயினும் மீட்கப்பட்டதாக தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா அதில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் இருந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை அவர் நடைபயிற்சி சென்றிருக்கிறார்.

அப்போது ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார்.

இதில் லேசான காயமடைந்த சுதா, சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்டவரை கைது செய்த காவல்துறையினர், எம்பியின் செயினை மீட்டுள்ளனர்.

Police have arrested a man who snatched the gold chain of Mayiladuthurai Congress MP Sudha while she was out for a walk in Delhi.

இதையும் படிக்க : திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

வட மாநிலத்தவர்களை இங்கு சேர்ப்பது தவறானது; ஊழலும்கூட: நயினார் நாகேந்திரன் பேட்டி

தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர்களைச் சேர்ப்பது தவறானது, அதுவும் ஒரு ஊழல்தான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் செல்வதற்காக சென்னையிலிருந்... மேலும் பார்க்க

கோவை உள்பட 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 1. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.2. தென் ... மேலும் பார்க்க

6.41 லட்சம் பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 6) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்துள்ளார்.இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:முத... மேலும் பார்க்க

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

திருப்பூர் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர்... மேலும் பார்க்க

அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் - உச்ச நீதிமன்றம்

புது தில்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், அரசு திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தத் தடை... மேலும் பார்க்க