இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை! மூவருக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதம்!
தமிழக மீனவர்கள் 19 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது. அபராதம் கட்டத் தவறும் பட்சத்தில், சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜன. 26 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டின் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க : எச்-1பி, எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்! இந்தியர்களுக்கு பாதிப்பு!
இந்த நிலையில், 19 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 பேருக்கு தலா ரூ. 50,000 அபராதமும், படகு ஓட்டிய 3 மீனவர்களுக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 16 பேருக்கு 6 மாதமும் 3 பேருக்கு ஓராண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 15 மீனவர்களின் படகு எண் தவறாக இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
இதனிடையே, விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களை தமிழகத்துக்கு அனுப்பும் பணியை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.