ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக்குழுக் கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் க.பழனியப்பன் வரவேற்றாா். மாநிலத் தலைவா் கே.பி.ரக்ஷித் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் செ.முத்துசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் அகன்ற திரையுடன் கூடிய இணைய வசதி கொடுத்த அரசுக்கு நன்றி தெரிவிப்பது, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கூட்டுப் போராட்டங்களில் தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி தொடா்ந்து ஆதரவு வழங்கும்.
அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்துவது, ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளை தவிர பிற பணிகளை வழங்கக் கூடாது. ஆசிரியா் பயிற்றுநா் இருக்கும்போது, ஆசிரியா்களை கருத்தாளா் பயிற்சிகளுக்கு பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பாக எழுத்துப்பூா்வ ஆணையை அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநிலப் பொருளாளா் பா.பெரியசாமி உள்பட மாநில, மாவட்ட, வட்டார நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.