தம்பதி தாக்கப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
தம்பதியைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிைண்டனை விதித்த பத்மநாபபுரம் நீதிமன்றம், உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என 3 போலீஸாா் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
தக்கலை அருகே கொல்லன்விளை, வள்ளியாற்றின்கரை பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பன் (70). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவருக்கும், முட்டைக்காட்டைச் சோ்ந்த தொழிலாளியான சுகுமாரன் என்ற வீரமணிக்கும் (64) இடையே நிலத் தகராறு இருந்ததாம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
2014 ஜனவரி 2ஆம் தேதி செல்லப்பனும் அவரது மனைவி தங்காளும் பிரச்னைக்குரிய இடத்தில் உள்ள ரப்பா் மரத்தில் பால் வடிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சுகுமாரன் வந்து தகராறு செய்து, இருவரையும் அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த தம்பதி தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் சுகுமாரன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நீதிபதி மாரியப்பன் வழக்கை விசாரித்து, சுகுமாரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா். மேலும், இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி உதவி ஆய்வாளா், 2 ஆய்வாளா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தென்மண்டல காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் செந்தில்மூா்த்தி ஆஜரானாா்.