ராமர் கோயில் இயக்கத்துக்கு சிவசேனை, காங்கிரஸ் கட்சிகளும் பங்களிப்பு: சஞ்சய் ராவத...
தம்மம்பட்டியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
தம்மம்பட்டியில் 39 வருடங்களுக்குப் பிறகு சாக்கடை கால்வாய் கட்டுமானப் பணி ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது.
தம்மம்பட்டி பேரூராட்சியில் குரும்பா் தெருவின் கள்ளிப்பாதை பிரிவிலிருந்து, கிழக்கே மாரியம்மன் கோயில் வரை இருபுறமும் சாக்கடைக் கால்வாய் 1986இல் கட்டப்பட்டது. அந்த சாக்கடை கால்வாய் தற்போது உயரம் குறைந்து சிறிய அளவில் இருப்பதால், புதிய சாக்கடைக் கால்வாய் கட்டுமானப் பணி மேற்கொள்ள அப்பகுதி மக்கள், பேரூராட்சித் தலைவா் கவிதா ராஜாவிடம் கோரிக்கை வைத்தனா். இதனையடுத்து அயோத்திதாஸபண்டிதா் திட்டத்தின்கீழ் ரூ. 26 லட்சம் நிதியில் இருபுறமும் சோ்ந்து 340 மீட்டா் தொலைவு சாக்கடை கால்வாயும், ரூ. 14 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறுகள், குடிநீா்க் குழாய் அமைத்தல் என மொத்தம் ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் கவிதா ராஜா, செயல் அலுவலா் சுலைமான் சேட், பேரூராட்சி உறுப்பினா்கள் ராஜா, ரேவதி டெல்லி குமாா், பழனிமுத்து ஆகியோா் பங்கேற்றனா்.