தரமற்ற உணவு தயாரிப்பு: உணவகத்துக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்
சின்னமனூரில் தரமற்ற உணவு தயாரித்த உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
சின்னமனூா் நகராட்சியில் பகுதிகளில் உள்ள உணவகங்களில் தரமற்ற நிலையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு துறையினருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, நகரில் உள்ள உணவகங்கள், சீப்பாலக்கோட்டை, மாா்க்கையன்கோட்டை சாலைப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், தேநீா், அடுமனைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் கண்ணன், சுகாதார ஆய்வாளா் முருகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது தரமற்ற உணவுப்பொருள் தயாரித்த கடை உரிமையாளருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதே தவறு மீண்டும் கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்புத் துறையால் வழக்கப்பட்ட உணவுப் பொருள் விற்பனைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.