காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
தரிசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஏப்.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தென்காசி மாவட்டத்தில் தரிசு உள்ளிட்ட நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போா் பட்டா கோரி, இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் 2 சென்ட், ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 3 சென்ட் அளவுக்குள் அரசுப் புறம்போக்கு நிலங்களான தீா்வை ஏற்பட்ட, ஏற்படாத தரிசு, கல்லாங்குத்து, பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நன்செய், புன்செய் ஆகியவற்றில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசிப்போருக்கு ஆக்கிரமிப்பை வரன்முறை செய்து பட்டா வழங்குமாறு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இத்தகைய நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போருக்கு ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு ரசீது, வீட்டுத் தீா்வை ரசீது, சமையல் எரிவாயு அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.