தருமபுரியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பேரணி
ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை பாராட்டி தருமபுரியில் முன்னாள் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனா்.
தகடூா் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் வீரமங்கையா்கள் சாா்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நமது நாட்டு ராணுவம் ஆபரேஷன் சிந்தூா் என்கிற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்திற்காக அவா்களுக்கு பாராட்டு தெரிவித்து வீரவணக்கம் செலுத்தும் வகையில் நடத்தப்பட்ட பேரணி தருமபுரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரா்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் இருந்து தொடங்கி ஆட்சியா் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
பேரணியில் கா்னல் சேரன் செங்குட்டுவன், முன்னாள் ராணுவ வீரா்கள் சங்க பிரதிநிதிகள் மாணிக்கம், நரசிம்மன், பொன்னுசாமி, தருமபுரி அரசு கலை கல்லூரி தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்து கொண்டனா்.